செய்தி விவரங்கள்

உழைக்கும் தோழர்களே ஒன்று சேருங்கள்.. உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்.!

உழைக்கும் தோழர்களே ஒன்று சேருங்கள்.. உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்.!

உழைப்பாளர்கள், தொழிலாளர்களின் உழைப்பின் காரணத்தினாலேயே இந்த உலகு இத்துணை அளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்றால் அதில் மிகையேதுமில்லை. அத்தகைய உழைப்பாளர்களின் தகைமையினை உலகினுக்கு உணர்த்திடவே மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அத்தகைய உழைப்பாளர்களின், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காய், தேவைகளுக்காய் நமது முன்னோடிகள் இழந்தவை ஏராளம், ஏராளம்..

இன்னமும் இந்த மண்ணில் வேலைக்கு ஏற்ற ஊதியம் என்பது முழுவதுமாக சாத்தியப்படவில்லை என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையும் கூட. உழைப்பாளர்கள் உழைத்து, உழைத்து ஓடாய் தேய்வதும், அவர்தம் உழைப்பினை சுரண்டி முதலாளிகள் உண்டு கொழுப்பதுவும் காலம், காலமாக இங்கு நிகழ்ந்துகொண்டே அல்லது நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

வேலைக்கேற்ற ஊதியம், பணிப்பாதுகாப்பு, பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட எண்ணற்ற தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் நம் முன்னே உள்ள சூழலில் இவற்றையெல்லாம் களைந்தெறிந்திட உழைப்பாளர்களின் ஒற்றுமை சாத்தியப்பட வேண்டியதும், சாத்தியப்படுத்திட வேண்டியதும் அவசியமான ஒன்று.

ஆம்.. தோழர்களே ஒன்றிணைவோம்.. வென்றெடுப்போம்.. நமக்கான உரிமைகளை..

உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்..

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு