செய்தி விவரங்கள்

இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்திற்கு எதிர்ப்பு - அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

இஸ்லாமியர்களால் பெரிதும் மதிக்கப்படும் ஷரியா சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தை அக்ட் ஃபோர் அமெரிக்கா எனும் அமைப்பே ஒருங்கினைத்துள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க், சிக்காகோ, பொஸ்ட்டன், டென்வர் மற்றும் சியாட்டல் ஆகிய நகரங்களில் ஷரியா சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், பெண்களின் உரிமை தொடர்பில் அக்கறை உள்ளவர்கள், பெண்களின் உரிமை தொடர்பில் போராடுபவர்கள் ஷரியா சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

ஷரியா சட்டம் அமெரிக்காவில் அமுல்படுத்தப்பட்டால் அது அமெரிக்க மக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் எனவும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்த நிலையில் குடியேற்றவாசிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு