செய்தி விவரங்கள்

எகிறும் வெப்பநிலையும் ஏறும் ஐஸ்க்ரீம் விற்பனையும்

 பிரிட்டனின் நீல்சென் என்ற நிறுவனத்தின் ஆய்வின் முடிவில் ,  இந்த வருடம் ஐஸ் கிரீம் விற்பனை  இங்கு நான்கு வீதத்தால் அதிகரித்துள்ளதாக அறியப்பட்டுள்ளது . இந்த விற்பனை கடந்த ஆண்டு ஜூன் மாத    விற்பனையுடன் ஒப்பீடு செய்யப்பட்டு இருந்தது .

1976க்கு பின்னர் மிக வெப்பமான ஜூலை மாதத்தை பிரிட்டன் சந்திப்பதே இந் விற்பனை உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது .

ஜூன் மாத நடுப் பகுதி வரை , மூன்று மாதங்களுக்கான பிரிட்டனின் நான்கு பெரிய சுப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை அதிகரித்து இருப்பதையும் கண்டறிந்துள்ளார்கள் . கடந்த நான்கு வருடங்கள் கண்டிராத விற்பனை உயர்வு இதுவாகும்.

நீல்சன் என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி , டெஸ்கோவின்  விற்பனை ,4.2 வீதத்தால் அதிகரித்து முதலிடத்தில் நிற்கின்றது .

இந்தப் பாரிய விற்பனை நிலையங்களை விட  ஏனைய விற்பனை நிறுவனங்களும் , இந்த வெப்பநிலை காரணமாக கூடுதல் விற்பனை கண்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு