செய்தி விவரங்கள்

பிரிட்டனுக்கு முதல் இடம்

ஒரு கணக்கெடுப்பின்படி மேற்கு ஐரோப்பிய நாடுகளில் , ஜெர்மனியை ஓரங்கட்டிவிட்டு , பிரித்தானியா முதலிடத்தில் வரப்போவதாகக் கூறுகிறார்கள். 2100ம்  ஆண்டளவில் இது சாத்தியமாகலாம் என்றும் , இந்த நாட்டின் சனத்தொகை 65மில்லியனிலிருந்து   80 மில்லியனாக உயரும் என்றும் சொல்லப்படுகின்றது .

உலக சனத்தொகை பற்றி ஐ நா சபை வெளியிட்ட பிந்திய அறிக்கையிலேயே இப்படிக் கூறப்பட்டுள்ளது .

இந்த அறிக்கையில் பிரான்ஸ் நாட்டின் சனத்தொகை குறிப்பிட்ட காலத்தில் , 64 மில்லியனிலிருந்து 74 மில்லியனாக உயரும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

இதே சமயம் ஸ்பெயின் , ஜெர்மனி நாடுகளின் சனத்தொகை 10மில்லியனால் வீழ்ச்சி காணும் என்றும் சொல்லப்படுகின்றது .

இப்பொழுது 81 மில்லியனாக உள்ள ஜெர்மனியின் ஜனத்தொகை  71 மில்லியனாகக் குறையும் என்றும் , ஸ்பெயினில் 46 மில்லியன்   36ஆகக் குறையுமென்றும் கணிக்கப்பட்டுள்ளது .

2030ம்  ஆண்டளவில் பூமியின் சனத்தொகை ஒரு பில்லியனைத் தாண்டும் என்று நம்பப்படுகின்றது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு