செய்தி விவரங்கள்

கின்னஸ் சாதனை படைத்த யாழ்ப்பாண சிறுமியின் நடனம்

இங்கிலாந்தில் இல்பொர்ட், ரெட்பிரிட்ஜ் இல் அமைந்துள்ள ஆராதனா நாட்டியப் பள்ளியில் நடனம் பயிலும் பிரகதா என்ற தமிழ்ச்சிறுமியின் பரதநாட்டிய அரங்கேற்றம் அண்மையில் லண்டன் பார்க்கிங் புறோட்வே அரங்கில் இடம்பெற்றது.

சுமார் மூன்று மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக குறித்த சிறுமியின் பரத நாட்டியம் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு விருந்தினர்களாக, ரெட்பிரிட்ஜ் மேயர் பாம்ரா மற்றும், ஈஸ்ட் ஹாம் அவை துணைத்தலைவர் போல் சத்திய நேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறுமியை வாழ்த்தினர்.

பிரகதாவின் இந்த சாதனை கின்னஸ் பட்டியலுக்கான பரிந்துரைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரகதாவின் பெற்றோர் யாழ்ப்பாணம் நெல்லியடி கரவெட்டியை சேர்ந்தவர்கள்.

இவருடைய ஆசிரியர் உரும்பிராயை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு