செய்தி விவரங்கள்

தங்கத்தினால் ஜொலித்த மணமகன்! பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்த நிகழ்ச்சி!

தங்கத்தினால் ஜொலித்த மணமகன்! பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்த நிகழ்ச்சி!

பாகிஸ்தானில் உள்ள லாகூரைச் சேர்ந்த வர்த்தகரான சல்மான் ஷாகித்திற்கு அண்மையில் திருமணம் நடந்தது. திருமணத்தை முன்னிட்டு மணமகன் வீட்டில் 'வலிமா' எனப்படும் விருந்து நடைபெற்றது.

குறித்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மணமகன் தங்கத்தினால் ஆன சூட், கற்கள் பதித்த டை மற்றும் தங்க ஷூக்கள் அணிந்திருந்தார். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

அவற்றில் மணமகன் சல்மான் ஷாகித் அணிந்திருந்த தங்க ஜரிகை சூட் மட்டும் பாகிஸ்தான் ரூபாயில் 65 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பலவிதமான உலோக கற்களால் ஆன டையின் மதிப்பு 7 லட்சம் ஆகும். அதே நேரத்தில் அவர் அணிந்திருந்த ஷூக்கள் மட்டும் 320 கிராம் சுத்த தங்கத்தில் தயாரானவை. அவற்றின் மதிப்பு 17 லட்சம் ரூபாய் ஆகும்.

தங்கத்தினால் ஆன உடை மற்றும் ஷூ அணிந்திருந்த மணமகன் சல்மான் ஷாகித் விழாவில் தகதகவென ஜொலித்ததால் திருமண விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அவரை அதிசயமாக ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தங்கத்தினால் ஜொலித்த மணமகன்! பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்த நிகழ்ச்சி!

இதுகுறித்து சல்மான் சாகித் தெரிவிக்கையில் :- நான் எப்போதும் தங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஷூக்கள் அணிவதை தான் விரும்புகிறேன். பொதுவாக மக்கள் தங்கத்தை கழுத்திலும் தலையில் கிரீடமாகவும் அணிகிறார்கள். நாம் சம்பாதிக்கும் பணம் மற்றும் சொத்துக்கள் காலில் ஒட்டும் தூசி போன்றது. அது அங்கே (காலுக்கு கீழே) தான் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு