செய்தி விவரங்கள்

நேருவின் பிறந்தநாளை மறந்த கூகுள் - இந்தியர்கள் வருத்தம் !

கூகுள் தேடுபொறியானது,  தனது முகப்பு பக்கத்தில் நேரு பிறந்தநாளுக்கு பதில் காகிதத்தில் துளையிடும் கருவியின் பிறந்தநாளை  இன்று கொண்டாடி வருகிறது.

நேருவின்   பிறந்தநாளை   மறந்த  கூகுள் - இந்தியர்கள்  வருத்தம் !

ஒவ்வொரு நாளும் உள்ள சிறப்பை  கூகுள் தனது முகப்பு பக்கத்தில் கொண்டாடுவது வழக்கம்.

விடுமுறை, தலைவர்களின் பிறந்தநாள், முக்கிய நிகழ்வுகள் என அனைத்தும் கூகுள் முகப்பு பக்கத்தில்  வெளியாவது வழக்கம்.

அதுபோல இன்று நேருவின் பிறந்தநாள் என முக்கிய நிகழ்வு இருந்தாலும் அதைத்தவிர்த்து கூகுளானது,  காகிதத்தில்  துளையிடும் கருவியின் 131வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது.

உலக அரசியல் தலைவர்களில் முக்கியமானவர்களில் நேருவும் ஒருவர். இவரது பிறந்தநாள் இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் துளையிடும் கருவின் 131வது பிறந்தநாளை கொண்டாடுவது இந்தியர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு