செய்தி விவரங்கள்

பிரிட்டனில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் நிலவரம்.

பிரிட்டனில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற தவறிவிட்டது. பிரிட்டன் பொதுத் தேர்வில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. வாக்குகளை எண்ணும் பணி தொடங்கிய போது முன்னிலையில் இருந்த ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, 311 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சியோ 260 இடங்களிலும், ஸ்காட்டிஸ் தேசிய கட்சி 35 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பிரிட்டனில் மொத்தமுள்ள 650 தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், ஒரு கட்சி 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இதனால், எந்த கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை என்பதால் தொங்கு நாடாளுமன்றம் அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் தெரசா மே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், அங்கு கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு