செய்தி விவரங்கள்

கிங்ஸ்டன் - ஒன்ராறியோ பகுதியில் விபத்து - 4 பேர் பலி

கனடாவில் கிங்ஸ்டன் - ஒன்ராறியோ பகுதியில் இடம்பெற்ற தொடர் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிங்ஸ்டன் – 401, ஒன்ராறியோவிற்கு அருகிலேயே இந்த தொடர்விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியில் பயணித்த ஏழு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தின் போது உயிரிழந்தவர்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஒரே வாகனத்தில் பயணித்தவர்களே இதன் போது உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்கள் குறித்த விபரங்கள் ,இதுவரை வெளியிடப்படவில்லை.

குறித்த விபத்தின் போது வாகனம் ஒன்று தீ பிடித்து எரிந்துள்ளதாகவும் விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு