செய்தி விவரங்கள்

வெள்ளை மாளிகைக்கு குடியிருக்க வருகிறார்கள் தாயும் மகனும்

வழமைக்கு மாறாக,  டிரம்ப் பதவி ஏற்று பல மாதங்கள் கழித்தே , அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் குடியிருக்க ஜனாதிபதியின் மனைவி மெலானியாவும் 11வயது மகனும் எதிர்வரும் புதனன்று வரவுள்ளார்கள்.

அடுத்த புதன் ஜனாதிபதி தனது 71வது பிறந்த தினத்தை கொண்டாட இருக்கின்றார்.  அவர் வாழ்நாளில் மறக்க முடியாத முறையில் பிறந்த தினம் கொண்டாடப்படும் என்று மெலானியா தெரிவித்துள்ளார் .

ஜனாதிபதி பதவி ஏற்ற காலம் தொடக்கம் அமெரிக்க அரசியலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை மெலானியாவின் வெள்ளை மாளிகை பிரவேசம் மாற்றி அமைக்கலாம் என்று அவதானிகள் கருதுகின்றார்கள் .சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் தம்பதிகளாக  விஜயம் செய்தமை அரசியல் ரீதியாக ஜனாதிபதிக்கு ஒரு பெரு வெற்றி என்று அமெரிக்க பத்திரிகைகள் புகழாரம் சூட்டி உள்ளன

பொதுவாக ஒரு புதிய ஜனாதிபதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும்  அவரின் குடும்பமும் வெள்ளை மாளிகையில் குடியேறுவது வழமை . முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பதவி ஏற்றதும் , உடனடியாக அவர் மனைவி மிச்சேலும் இரு பெண் பிள்ளைகளும் ஜனாதிபதி மாளிகைக்கு குடியேற வந்துவிட்டார்கள் .

ஹில்லரி கிளின்ரனை தோற்கடிக்க ரஷ்யா அமெரிக்க தேர்தலில் தன் மூக்கை நுழைத்தது என்று குற்றச்சாட்டுகள் பெருவாரியாக வந்ததால் , இதுகாலவரை தனியனாகவே ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வந்தார்

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு