செய்தி விவரங்கள்

மகாராணியின் வருடாந்த “கைசெலவுத்“ தொகை, 6மி.பவுண்ட்ஸ் தொகையால் அதிகரிப்பு

பிரிட்டன் மகாராணியின் மாளிகைப்பணியாட்களின் ஊதியம் , அலுவலகரீதியான பயணங்கள் , மற்றும் மாளிகை நிர்மாணப் பணிகளுக்காக கொடுக்கப்படும் பணத் தொகை  அதிகரிக்கும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன .

2018/19ம்  கால கட்டத்திற்கான பணக் கொடுப்பனவு , இதுவரையில் வழங்கப்பட்டதை விட 6மில்லியன் பவுண்ட்ஸ் தொகை அதிகமாக இருக்கும் என்று பீபீசி செய்திகள் தெரிவித்துள்ளன .

முடிக்குரிய காணி வருமானம் 24மில்லியன் பவுண்ட்ஸ் அதிகரிப்பைக் கண்டதால் , இராணிக்கு பொதுமக்கள் நிதியத்திலிருந்து கிடைக்கும் வருமானம் 8வீதத்தால் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது .

இராணியும் அவர் குடும்ப அங்கத்தவர்களும் வருடாந்தம் மேற்கொள்ளும் பயணங்களுக்கான செலவுகள்  , 2016/17 காலகட்டத்தில் ,வரிகொடுப்பாளருக்கு 4.5 மில்லியன் பவுண்ட்ஸ் தொகை செலவீனத்தை ஏற்படுத்தி வந்தததாகச்  சொல்லப்படுகின்றது 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு