செய்தி விவரங்கள்

விலை மதிப்பான திருமணப் பதிவு மோதிரத்தை வைத்திருக்கலாம் –நீதவான் தீர்ப்பு

கனடிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பில் 19,000 கனடிய டொலர் பெறுமதியான திருமணப் பதிவு மோதிரத்தை பெண் தொடர்ந்து வைத்திருக்கலாம்  என்று கூறப்பட்டுள்ளது .

லோறேன் என்ற பெண்ணின் கணவர் பண விவகார சச்சரவு காரணமாக விவாகரத்துக்கு செய்வதற்கு  நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவர் தான் போட்ட மோதிரத்தை திருப்பி தரவேண்டும் என்று கேட்டிருந்ததோடு கடனாக முன்பு கொடுத்த 6000 டொலர் தொகையை திருப்பி தரவேண்டுமென்றும் நீதிமன்றத்தில் விண்ணப்பித்து இருந்தார் .

கடந்த மூன்று வருடங்களாக இவர்களுக்குள் தொடர்ந்த நட்பு ஒரு வருட காலத்திற்கு பதிவுத் திருமணத்தில் முடிந்திருந்தது .  .3.25 கரட் வைர மோதிரம் திருமணம் கருதி பரிசாகவே விரல்களில் அணிவிக்கப்பட்டது . எனவே விவாக பந்தத்தை முறிப்பதால் அதை  திருப்பித்தர.வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதி தீர்ப்பு வழங்கி இருக்கிறார் .

திருமணத்தை ஆடம்பரமாகச் செய்ய வேண்டும் என்ற கணவனின் விருப்பத்திற்கு மனைவி சம்மதிக்காத காரணமே விவாகரத்து கோரும் வரை சென்றுள்ளது.

மெக்ஸிகோ செல்ல கடனாக வாங்கிய பணத்தினை திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு