செய்தி விவரங்கள்

சந்தேகத்திற்கு இடமான உரையாடல் –விமானம் திசை திருப்பம்

ஸ்லோவேனியாவில் இருந்து  இலண்டன் நோக்கி பறந்து கொண்டிருந்த  விமானம் ஒன்று  திசை திருப்பபப்பட்டு  ஜெர்மனியின் விமான நிலையம் ஒன்றில் நேற்று மாலை தரையிறக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது .

ஜுப்லிஜானா என்ற விமான நிலையத்திலிருந்து  இங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டெட்  விமான நிலையம் நோக்கி பறந்து சென்ற ஈசிஜெட் விமானம் ஒன்றே ஜெர்மனியின் பொண் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டு பொலிசாரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .

இதில் பயணித்த 151பயணிகளும் வெளியேற்றப்பட்டு , ஹோட்டலில் தங்க வைக்க்ப்பட்டுள்ளர்கள். அங்கு விமானங்கள் தரை இறங்குவது மூன்று மணி நேரம் இடை நிறுத்தப்பட்டது .

யாருமே உரிமை கோராத நிலையில் பொலிசார் சில பயணப் பொதிகளை அழித்துள்ளதாக ஜெர்மன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன .

பயணிகள் சனி இரவு ஹோட்டலில் தங்கி  இன்று ஞாயிறு தினமே மீண்டும் விமானமேறி பயணித்துள்ளர்கள்

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு