செய்தி விவரங்கள்

ஈழத்தமிழர்களுக்கு தோள்கொடுத்த புலம்பெயர்த் தமிழர்கள்

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் கடந்த திங்கட்கிழமை (12-06-2017) அன்று நாடு கடந்த தமிழீழ அரசினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டம் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மன் சுவிட்ஸர்லாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய 6 புலம்பெயர் நாடுகளில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது.

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்னரும் இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பு முற்றுப்பெறாததை எதிர்த்து கேப்பாபுலவு மக்கள் 100 நாட்களை தாண்டி தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானிய பிரதமர் காரியாலத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ் அறவழிப் போராட்டத்துக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் வீரத்தமிழர் முன்னணி ஐக்கிய இராச்சியம் போன்ற பல பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் தமது ஆதரவுகளை வழங்கி போராட்டத்தை வலுச்சேர்த்துள்ளனர்.

குறிப்பாக போராட்டத்தில் பெரும் திரளான பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழர்கள் பங்குகொண்டு எம் உறவுகளுக்காக குரல் கொடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு