செய்தி விவரங்கள்

நான் என்னிடமிருந்த எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் – ஒருவரின் குமுறல்

 மேற்கு இலண்டனில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்து  17பேரை உயிர்ப்பலி   எடுத்து 74 பேரைக் காயப்படுத்தி இருந்தது . சற்று  முன்பு இறந்தவர்கள் தொகை 12இலிருந்து   17 ஆக உயர்ந்திருப்பதாக பீ பீ சீ செய்திகள் தெரிவித்துள்ளன . இத் தொகை மேலும் உயரலாம் என்று  போலீசார்  எச்சரித்து உள்ளார்கள் .

இந்த 24மாடிக் கட்டடத்தில் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் இருந்ததாக அறியப்படுகின்றது .மோப்பம் பிடிக்கும் நாய்கள் கட்டட இடிபாடுகள் இடையே அனுப்பி வைக்கப்படவுள்ளன .

செல்சி , கென்சிங்டன் கவுன்சில் அதிகாரிகள் 44குடும்பங்களுக்கு அவசரகால உறைவிடத்தை ஒழுங்கு செய்துள்ளார்கள் .   இந்தக் கட்டடம் புனர் நிர்மாணப் பணி செய்யப்படவேண்டிய ஒன்றாக இருந்தும் சம்பந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .

இந்தக் கோர தீ விபத்தை நேரில் கண்டவர்கள் ஒரு பயங்கரத் திரைப்படத்தை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டதாக கூறி இருக்கிறார்கள் . 

எரியும் மாடியின் கீழ் நின்ற ஒருவர் இது பற்றி பிரஸ்தாபிக்கையில் அப்பப்பா மகா பயங்கரம் .  ஒரு தந்தை தனது இரு பிள்ளைகளையும் சாரளம் ஊடாக வீசி எறிந்ததைக்  என் கண்களால்  நேரில்கண்டேன் என்று விபரித்துள்ளார்  .

சமீரா என்பவர் தங்கள் சாரளங்கள் ஊடாகவும் , பல்கனியில் இருந்தும் பலர் பறப்பது போல உணர்ந்தேன் . பல சிறுவர் சிறுமிகள் உதவிக்காக அலறுவது என் காதில் வீழ்ந்தது . நாலாம் மாடியில் ஆரம்பித்த தீ எவ்வளவு வேகமாக கட்டடம் முழுவதும் பரவியது என்பதை நினைக்குபோதே அதிர்ச்சியாக இருக்கின்றது என்று கூறி இருக்கின்றார்  ,

நான் எல்லாவற்றையும் தீயில் இழந்து விட்டேன் . நான் உயிரோடு இருப்பது என் அதிஸ்டம் என்று குமுறி  உள்ளார்   இன்னொருவர் .

தீ பிடித்ததை எச்சரிக்கை செய்யும் எச்சரிக்கைக்  கருவி செயற்படவில்லை .என் அயலில் இருப்பவர் கதவைப் பலமாகத் தட்டி என்னை எழுப்பிய்தால்தான் நான் உயிர் தப்பினேன் என்று கூறியுள்ளார் இன்னொருவர்  .

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல்  பிரளயத்தை  தன் நினைவுக்கு கொண்டு வந்துள்ளதாக வேறோருவர் விபரித்துள்ளார்  

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு