செய்தி விவரங்கள்

பிரித்தானிய தாக்குதல் தொடர்பில் கண்டனத்தை வெளியிட்டார் ஹிலரி

பிரித்தானியாவில் மன்செஸ்டர் அரினாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தமது இரங்கலை தெரிவிப்பதாக அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் இடம் பெற்ற சிறுவர் சுகாதார பரமரிப்பு திட்டத்திற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் மென்செஸ்டர் எரினா அரங்கில் இடம்பெற்ற அமெரிக்க பாப் இசை பாடகி அரியானா கிறென்டேயின் இசை நிகழ்ச்சியின் போது அங்கு ஊடுறுவியிருந்த தற்கொலைதாரியொருவரினால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

பிரித்தானிய நேரப்படி 10.33 அளவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் எட்டு வயது சிறுமி உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 59 பேர் காயமடைந்துள்ளனர்.

நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு  இஸ்லாமிய தேசம் என்ற ஐ.எஸ் ஆயுததாரிகள் உரிமை கோரியுள்ளனர்.

இதனையடுத்து பிரித்தானியாவில் தேடுதல் வேட்டைகள் முடுக்கிவிடப்பட்டிருந்த நிலையில், தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த தாக்குதலை தொடர்ந்து நேற்றைய தினம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் தலைமையின் கீழ் அவசரகால கூட்டம் இடம் பெற்றிருந்தது.

குறித்த கூட்டத்தில், பிரித்தானியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இது தோடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தெரேசா மே, தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியாத அப்பாவி இளைய சமூகத்தினரை இலக்கு வைத்து குறித்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு