செய்தி விவரங்கள்

காலநிலை மாற்றக் கொள்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் வாரம் - ட்ரம்ப்

காலநிலை மாற்ற கொள்கை தொடர்பான முக்கிய உடன்படிக்கை தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் வாரத்திற்குள் வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்ற ட்ரம்ப், அங்கு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அண்மைய காலங்களில் அமெரிக்காவின் மீது அதன் நட்பு நாடுகளால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை குறைக்கும் முகமாக குறித்த தீர்மானத்தை ட்ரம்ப் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், வொஷிங்டன் திரும்பியவுடன் பாரிஸ் உடன்படிக்கை தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த காலநிலை மாற்றக் கொள்கை தொடர்பான உடன்படிக்கை ஒரு ஏமாற்று வேலை என ட்ரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேசத்தில் முதன்முறையாக காலநிலை மாற்றக் கொள்கை தொடர்பாக பாரிஸ் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த ஒப்பந்தத்தின் நோக்கம் சர்வதேசத்தினால் வெளியிடப்படும் கார்பன் கழிவுகளால் அதிகரிக்கும் வெப்பநிலை 2 பாகை செல்சியஸுக்குள்  பேணுவதே என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமுலுக்கு வந்த பரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கைக்கு 195 நாடுகள் ஆதரவு அளித்த போதும், அமெரிக்காவின் குறித்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை.

எனினும், காலநிலை மாற்றக்கொள்கையிலிருந்து பின்வாங்கக்கூடாது என குடியரசு கட்சியைச் சேர்ந்த 36 செனட் சபை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளமையினையடுத்து, பரிஸ் ஒப்பந்தத்தில் உள்ள சாதக பாதகங்களை ட்ரம்பின் நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.

இந்தநிலையில், ட்ரம்ப் அடுத்த வாரம் தனது இறுதி முடிவினை அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு