செய்தி விவரங்கள்

சீன துணைப் பிரதமருடன் அமெரிக்க அமைச்சர் பேச்சு வார்த்தை

அமெரிக்க எரிசக்தி வளத்துறை அமைச்சர் ரிக் பெர்ரி சீன துணைப்பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடல் இன்று சீன தலைநகர் பீஜிங்கில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.

காலநிலை மாற்றம் தொடர்பிலான பரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்க விலகியமை குறித்து இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் ஏனைய காலநிலை தொடர்பான சாதகமான முயற்சிகளில் சீனாவுடனான ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கும் வகையில் அமெரிக்க எரிசக்தித்துறை செயலாளரின் சீன விஜயம் அமைந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் 195 நாடுகள் இணைந்து பரிஸில் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை அமெரிக்க பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்து குறித்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச நாடுகள் மத்தியில் கடும் விமர்சினங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு