செய்தி விவரங்கள்

சிலியில் தேவாலயங்கள் மீது தாக்குதல் - விசாரணைகள் ஆரம்பம்

சிலி நாட்டிலுள்ள தேவாலயங்கள் பலவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரம், புனித போப் ஆண்டகை பிரான்சிஸ் சிலி நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் அங்குள்ள தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டும் சூறையாடப்பட்டும் வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிலியின், தலைநகர் சான்டியாகோவில் மட்டும் மூன்று தேவாலயங்கள் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், இந்த தாக்குதல் சம்பவங்களினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலியில் தேவாலயங்கள் மீது தாக்குதல் - விசாரணைகள் ஆரம்பம்

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு