செய்தி விவரங்கள்

3 வயது குழந்தையுடன் நாடாளுமன்றத்தில்; ஒளிந்து விளையாடுகின்றார் பிரதமர்!

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது 3 வயது குழந்தையுடன் அலுவலகம் வந்து புகழ்பெறுவது எப்படி என   உலக தலைவர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார் .

மூன்று வயது அட்ரீயாங் ட்ரூடோ, பிரதமர் அலுவலகத்தின் மார்பிள் பால்கனி உட்பட அனைத்து இடத்தையும் சுற்றி வந்த புகைப்படம் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு பலரையும் கவர்ந்துள்ளது.

தந்தையும் மகனும் சேர்ந்து ஊடகத்தையும், அரசியல்வாதிகளையும் எதிர்கொள்ளும் புகைப்படமும் அதில் அடங்கும்.

இது தொடர்பில் முகநூலில் ஒருவர் தெரிவிக்கையில்;

"மிகவும் அற்புதம், உங்களுடைய தந்தையின்(ட்ரூடோவின் தந்தை முன்னாள் பிரதமர்) புகைப்படத்தையும், உங்களின் புகைப்படத்தையும் பார்த்த ஞாபகம் இருக்கிறது அந்தளவிற்கு எனது வயதும் உள்ளது" என கருத்து தெரிவித்துள்ளார்.

"இது விளம்பரத்திற்கான செயலோ இல்லையோ ட்ரூடோவை ஒரு குடும்பஸ்தர் என்று கூறி கொள்ளலாம்" என மற்றொரு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

45 வயதாகும் ஜஸ்டின் ட்ரூடோ அவ்வப்போது தனது செய்கையால் இணையத்தில் புகழ்பெறுவது வழக்கம். எனவே இது அவருக்கு முதல் முறையன்று.

லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ சிரிய அகதிகளுக்கு ஆதரவு வழங்கிய போதும், ஓரினச் சேர்கையாளர்களுக்கான பேரணியில் கலந்து கொண்ட போதும், தான் ஒரு பெண்ணியவாதி என்று வெளிப்படையாக தெரிவித்த போதும், தனது ஆதரவாளர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றார்.

கடந்த வாரம் சிரிய அகதி ஒருவர் தன் குழந்தைக்கு ஜஸ்டினின் பெயரை சூட்டினார். குவாண்டம் கம்பூயுட்டிங் பற்றி அவர் சட்டென அளித்த பதிலும், ட்ரம்பின் கை குலுக்கலை லாவகமாக எதிர்கொண்ட போதும் அவர் பாராட்டுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு