செய்தி விவரங்கள்

சான்டியாகோ பகுதிகளில் பரவி வரும் காட்டுத் தீ - ஆயிரம் ஏக்கர் தீக்கிரை

கலிஃபோர்னியா மாநிலத்தின் சான் டியகோ பகுதியில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயினால் இதுவரை சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.

குறித்த தீயிணை கட்டுப்படுத்துவதற்காக பல தீயணைப்பு படைவீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான் டியாகோவில் பரவிவரும் காட்டுத்தீயினால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த தீ பரவலுக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நிலவிவரும் கடும் வெப்பம் மற்றும் அதிவேகக் காற்று என்பனவே இந்த தீ பரவக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தீயணைப்பு படையினரின் கடுமையான போராட்டங்களுக்கு பின்னர் சுமார் 20 சதவீதமான பகுதியின் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு