செய்தி விவரங்கள்

மன்செஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்தார் பிரித்தானிய இளவரசர்

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மன்செஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நேற்றைய தினம் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வில்லியம்ஸின் இந்த விஜயத்தின்போது, தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகளையும் அவர் சந்தித்துள்ளார்.

குறித்த தாக்குதல் தொடர்பில் அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மன்செஸ்டர் கத்தோலிக்க தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்திலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த மாதம் மன்செஸ்டர் அரினா விளையாட்டரங்கில் நடைபெற்ற அமெரிக்க பொப் பாடகியான அரியான கிராண்டேயின் இசை நிகழ்ச்சியின் போதே குறித்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

குறித்த தாக்குதலின் போது 22 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததோடு 64பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களை அரியான கிராண்டேயும் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு