செய்தி விவரங்கள்

கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காததுக்கு, ஆலோசகர்கள் இருவரின் முடிவு

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததற்குப் பொறுப்பேற்று பிரதமர் தெரசா மேவின் ஆலோசகர்கள் இருவர், தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். மொத்தம் 650 இடங்களைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை (ஜூன் 8) தேர்தல் நடைபெற்றது. தனிப் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை என்ற நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 318 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

அதற்கு அடுத்தபடியாக தொழிலாளர் கட்சி 261 இடங்களைக் கைப்பற்றியது. இதனால் எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க இயலாத சூழல் உருவானது. 10 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனநாயக (டெமோக்ராட்டிக் யூனியனிஸ்ட்) கட்சியின் ஆதரவுடன் தெரஸா மே மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று தெரிகிறது. இந்த நிலையில், கன்சர்வேடிவ் கட்சிக்கு தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பொறுப்பேற்று தெரசா மேவின் ஆலோசகர்கள் நிக் டிமோத்தி, ஃபியோனா ஹில் ஆகிய இருவரும், தங்களது பதவியை ராஜிநாமா செய்வதாக சனிக்கிழமை அறிவித்துள்ளனர். ஆலோசகர்களின் தவறான வழிகாட்டுதல்களே தெரசா மேவின் தோல்விக்குக் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு