செய்தி விவரங்கள்

10 எம்.பி.க்கள் ஆதரவுடன் ஆட்சியைத் தக்க வைக்க திட்டம் தெரேசா மே.

லண்டனில் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த சிறு கட்சியான டி.யூ.பி.யின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது குறித்த உடன்படிக்கையை ஏற்படுத்தியதாக பிரதமர் தெரசா மே அறிவித்தார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள 650 இடங்களுக்கான தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 318 இடங்களை மட்டுமே வென்றது. டெமோக்ராடிக் யூனியனிஸ்ட் கட்சியின் 10 எம்.பி.க்கள் ஆதரவுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள தெரசா மே பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, வலதுசாரிக் கொள்கையுடைய டி.யூ.பி.யுடன் குறைந்தபட்ச திட்ட உடன்படிக்கை ஏற்பட்டதாக அவர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு இது உதவும் என்றார் அவர். இதனிடையே, தேர்தலில் பெரும்பான்மையை இழந்த தெரசா மே கட்சித் தலைமையையும் பிரதமர் பதவியையும் துறக்க வேண்டும் என்று அவரது கட்சியில் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

பிரதமர் பொறுப்புக்கு போரிஸ் ஜான்சன் அல்லது வேறு ஒருவரை முன்னிறுத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக ஊகச் செய்திகள் வலம் வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அரசியின் உரைக்கு எதிராக வாக்களிப்போம் என்று தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின் கூறினார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு