செய்தி விவரங்கள்

எதிர்கால சந்ததியினரின் வாழ்வை Brexit சீரழிப்பதாக அமையும்; லிபரல் கட்சி!

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு  விலகுவது எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீரழிப்பதாக அமையும் என்று  லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டிம் ஃபரோன்  [Tim Farron] கூறியுள்ளார்.

பிரித்தானிய லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டிம் ஃபரோன் [Tim Farron] தமது  கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில்; "ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற பட்சத்தில் அதை எதிர்க்க பொது மக்களுக்கு உரிமை உள்ளது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளூர் சந்தையில்  நிலைத்திருப்பது வணிகத்திற்கும், தொழிலாளர்களுக்கும் அவசியமானது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை  சீரழித்து விடுவதாகவே அமையும்" என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு