செய்தி விவரங்கள்

ஏவுகணைத் தயாரிப்பில் தீவிரம் காட்டும் வடகொரிய அரசு

அமெரிக்காவை எட்டும் சக்தி கொண்ட ஏவுகணைத் தயாரிப்பில் தீவிரம் காட்டிவரும் வடகொரியா , அதன் ஒரு கட்டமாக ராக்கெட் எஞ்சின் ஒன்றைப் பரிசோதனை செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றார்கள் .

அமெரிக்காவிற்கும்  வடகொரியாவுக்கும் இடையில் ஏவுகணை உற்பத்தி காரணமாக உருவாகி உள்ள பதட்டமான நிலையில் , இந்தப் புதிய தகவல் வெளியாகி இருக்கின்றது .

சர்வதேசரீதியாக  வடகொரியாவுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்தாலும் , தனது ஏவுகணைப் பரிசோதனைகளை அதிகரித்து , ஒரு அணுஆயுதத்தை தயாரிப்பதில் வடகொரியா தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.

நேற்று வியாழனன்று செய்த எஞ்சின் பரிசோதனை,  கொரியாவிலிருந்து அமெரிக்க மண்ணைச் சென்று தாக்க வல்ல , பலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைத் தயாரிப்பின் ஒரு கட்டம் , என்று பெயர் கூற விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் கூறி இருக்கின்றார்கள் .

எதையுமே மூடுமந்திரமாக வைத்திருக்கும் வட கொரியாவின் நடவடிக்கைகளை கண்டறிவது பல நாடுகளுக்கு சிரமமான பணியாக இருந்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு