செய்தி விவரங்கள்

என்றும் இந்தியர்கள் தான் பெஸ்ட், அமெரிக்க அரசு உறுதிசெய்துள்ளது..!

ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக அமெரிக்க அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதுக்கு இந்த ஆண்டில் தெலங்கானா மாநிலம், ரச்சகொண்டா நகர காவல் துறை ஆணையர் மகேஷ் முரளிதர் பகவத் தேர்வு செய்யப்பட்டார். உலகம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் இந்த விருதை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

எனினும், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் மகேஷ் முரளிதர் பகவத் பங்கேற்கவில்லை. அரசின் பல்வேறு துறைகளின் உதவியுடன் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவில் மிகச் சிறப்பாக அவர் பணிபுரிந்து நூற்றுக்கணக்கானவர்களை மீட்டுள்ளார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க முடியாமல் போனதை எண்ணி வருந்துகிறோம். ஆள் கடத்தல் பிரிவில் முக்கியப் பங்காற்றி வரும் மகேஷை நேரில் கௌரவிக்க விரும்புகிறோம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனும் பங்கேற்றார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு