செய்தி விவரங்கள்

ஆபுகானிஸ்த இராணுவ வீரர் அமெரிக்க இராணுவ தளத்தில்தாக்குதல் .

ஆபுகானிஸ்த இராணுவ வீரர்  ஒருவர் அமெரிக்க இராணுவ தளமொன்றில் சனிகிழமை தாக்குதல் நடாத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளன .தலைநகரான காபுலில் உள்ள அமரிக்க இராணுவ தளமொன்றில் நடந்த தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற முன்னைய செய்தி அமெரிக்க இராணுவப்பேச்சாளரால் மறுக்கப்பட்டுள்ளது .

ஒரு தொகை இராணுவ வீரர்கள் தாக்குதலில் காயப்பட்டதை  இவர் ஒத்துக் கொண்டுள்ளார் . இச் சம்பவத்தில் ஒரு ஆபுகானிஸ்த இராணுவ வீரர்  கொல்லப்பட்டதாகவும் இன்னொருவர் காயப்பட்டதாகவும் அமெரிக்கா கூறுகின்றது .

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு