செய்தி விவரங்கள்

பிரிட்டனுக்கு வந்த சிரிய அகதி இறந்தவர்களில் ஒருவர்

சிரியாவில் இருந்து பிரிட்டனுக்கு அகதியாக வந்த  ஒருவர் சமீபத்திய தீவிபத்தில் இறந்த ஒருவராக இனங் காணப்பட்டுள்ளார் . இவர் பெயர் முஹம்மத் அல்ஹஜாலி என்றும் , வயது 23எனவும் ஒரு அறநிலையம் உறுதிப்படுத்தி உள்ளது .

இவர் 2014இல் பிரிட்டனுக்கு வந்ததாகவும் வட கென்சிங்க்டனில் சிவில் பொறியியலாளர் துறை படித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது சொந்த மண்ணில்  போருக்கும் மரணத்திற்கும் அஞ்சி தப்பியோடி தஞ்சம் புகுந்த இடத்தில் , மரணம் வேறு ஒரு வடிவில் வந்திருப்பதாக  இந்த அமைப்பு  கூறி இருக்கின்றது .

24 மாடிக் கட்டடத்தின் 14வது மாடியில் இந்த இளைஞர் தன் சகோதர் ஒமார் என்பவருடன் வசித்து வந்ததாகவும் இருவரும் தப்புவதற்காக கீழே இறங்கி வந்த சமயம்  வழியில் ஒருவரை ஒருவர் தவறவிட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றது . ஒமார் தீயணைப்பு படையினரால் வழியில் காப்பாற்றப்பட்டதாகவும் , முஹம்மத் மீண்டும் அறைக்கு வந்து சிரியாவில் உள்ள தன் நண்பர் ஒருவரோடு உரையாடிக்கொண்டு இருந்ததாகவும்   அறியப்படுகின்றது .

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவர் சகோதரன் ஒமார் இன்னும் உயிரோடு இருக்கிறார் .

இந்தக் குடிமனையில் இறந்த அனைவரையும் அடையாளம் காணமுடியாமல் போகலாம் என்று பொலிசார் எச்சரித்துள்ளார்கள்

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு