செய்தி விவரங்கள்

முஸ்லிமாக இருந்தால் அமெரிக்கா செல்ல முடியாது, டிரம்ப் புதிய சட்டம்.

ஆறு முஸ்லிம் நாடுகள் மீதான விசா தடையை லேசாக தளர்த்தியுள்ளது டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் சிரியா, சூடான், லிபியா, ஈரான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைவதற்கு விசா வழங்க சில மாதங்களுக்கு தடை பிறப்பித்து உத்தரவிட்டார். இதற்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. போராட்டங்கள் வெடித்தன.

இந்நிலையில், இந்த 6 நாடுகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை உத்தரவு சிறிது தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சிரியா, சூடான், லிபியா, ஈரான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள், தங்களது நெருங்கிய உறவினர்களைப் பார்க்கவும் தொழில் ரீதியாக அமெரிக்கா வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோர், கணவன்/மனைவி, குழந்தைகள், வயதுக்கு வந்த மகன் அல்லது மகள், மருமகன், மருமகள், சகோதரர்கள் ஆகியோர் ஏற்கனவே அமெரிக்காவில் வசித்து வந்தால், அமெரிக்காவிற்குள் வர விசா வழங்கப்படும். இதுதவிர வர்த்தக தேவை உள்ளவர்கள் அதற்கான ஆவணங்களை காண்பித்து அமெரிக்கா செல்ல முடியும். ஆனால் உரிய ஆவணங்களை அமெரிக்க தூதரகத்தில் சமர்ப்பித்தே விசா பெற முடியும்.

பாட்டி-தாத்தா, பேரப்பிள்ளைகள், அத்தை, சித்தி, பெரியம்மா, மாமா, சித்தப்பா, பெரியப்பா, அண்ணன் குழந்தைகள், அக்கா குழந்தைகள், ஒன்றுவிட்ட சகோதரர்கள், மாமா-அத்தை குழந்தைகள், மருமகன், மருமகள், திருமணம் செய்துகொள்ளப்போகிறவர்கள் உள்ளிட்ட 'விரிவாக்கப்பட்ட' உறவுகளை பார்க்க வர அனுமதிகிடையாது. வியாழக்கிழமை முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு