செய்தி விவரங்கள்

கனடாவில் 24 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான போதைப்பொருட்கள் மீட்பு

கனடாவில் 24 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான போதைப்பொருட்கள் மீட்பு

கனடாவில் நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 24 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிசதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தே குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்ற்ப்பட்டதாக ரொரான்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த நடவடிக்கைகளின் போது மொத்தமாக 22 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதில் இரண்டு தாக்குதல் துப்பாக்கிகளும், ஒரு இலகு இயந்திரத் துப்பாக்கியும் அடங்குவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, போதைப்பொருள் மற்றும் ஆயுதப் பாவனை தொடர்பில் மொத்தம் 28 பேர் மீது குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தமிழ் செய்திகளுக்கு ...

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு