செய்தி விவரங்கள்

போதைக்கு அடிமையான 1 மில்லியன் பெண்கள் அதிர்ச்சி!

போதைக்கு அடிமையான 1 மில்லியன் பெண்கள் அதிர்ச்சி!


ஆப்கானிஸ்தான் நாட்டில் 1 மில்லியனுக்கு அதிகமான பெண்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் சுகாதார அமைச்சகம் போதைக்கு அடிமையாகிய பெண்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் 1 மில்லியனுக்கு அதிகமான பெண்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட சிறுவர்களும் போதைக்கு அடிமையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதைக்கு அடிமையாகியுள்ள சிறுவர்களை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக 20 போதை மீட்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கடந்த ஞாயிற்றுக்கிழமை காபுலில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைவர் ஷாக்பூர் யூஹப் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு