செய்தி விவரங்கள்

அகதியின் கடுமையான போராட்டம்; இறுதியில் புகலிடத்தைப் பெற்றுக் கொடுத்தது!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டை சேர்ந்த Seidu Mohammed(24) என்பவர் கால்பந்து வீரர் ஆவர்.

ஓரினச்சேர்க்கையாளரான இவருக்கு, கால்பந்து விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என்கின்ற கனவும் இருக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக இவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரியவந்ததும் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் கானா நாட்டில் திருமணம் செய்துகொள்வது குற்றமாகும். தனக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த முகமது 2015-ம் ஆண்டு புகலிடம் பெறுவதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

இருந்தும், புகலிடம் கிடைப்பதற்கு முன்னதாக அமெரிக்காவிற்கு டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஆனதால் முகமதுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டது.

அமெரிக்காவில் தனக்கு புகலிடம் கிடைக்க வாய்ப்பில்லை என எண்ணிய முகமது, Razak Ioial(34) என்ற நண்பருடன் அயல் நாடான கனடாவிற்கு செல்ல திட்டமிட்டார்.

பணத்தை சக நண்பர்களிடம் பெற்றுக் கொண்ட முஹம்மது,  வாகனம் ஒன்றில் ஏறி  இருவருமாக  கனடா எல்லைக்கு சென்றுள்ளனர்.

அந்நேரத்தில் கனடாவின்  எல்லையில் கடுமையான பனிப்புயல் வீசியுள்ளது. போதுமான உடைகள்  இல்லாது வெளியே செல்வதென்பது சாத்தியப்படவில்லை.

எனினும், முயற்சியை கைவிடாத முகமது மற்றும் அவரது நண்பர்,  நூற்றுக்கணக்கான மைல்களை நடந்தே சென்றுள்ளனர்.

கடுமையான குளிரில் இரவும் பகலும் நடந்து சென்றதால் முகமதுவிற்கு  வினோதமான நோய் ஒன்று ஏற்பட்டது. அதன்பிறகே  சிலர் இவர்கள் இருவரையும்  மீட்டு மனிடோபா நகரத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

முகமதுக்கு ஏற்பட்ட  நோயால்  அவரது இரண்டு கை விரல்கள் அனைத்தையும் துண்டிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை  ஏற்பட்டது. வைத்தியர்களும் சத்திர சிகிச்சையை மூலம் அதனை  செய்து முடித்தனர்.

முதலில் அமெரிக்காவில் புகலிடம் கோரி,  முகமது அந்நாட்டிற்கு சென்றதால் அவரை அமெரிக்கவிற்கே  திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இருந்தும், தன்னுடைய உடல்நிலை கருதி கனடாவிலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என முகமது வழக்கு பதிவு செய்திருந்தார்.

கனடாவில் முகமது தொடர்ந்து தங்குவதற்கு, நீண்ட விசாரணைக்கு பின்னர், அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் தங்குவதற்கு அனுமதி கிடைத்து விட்டதால், தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளதாக முகமது தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு