செய்தி விவரங்கள்

கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் வெல்லவில்லை

12தடவைகள் கிரான்ட் ஸ்லாம் போட்டிகளை வென்றெடுத்துள்ள  செர்பியா டென்னிஸ் வீரர் நோவாக் சொக்கொவிச்சுக்கு 2017பொல்லாத காலமாக அமைந்துள்ளது .

2011க்குப் பின்னர் , முதற்தடவையாக முதல் இரண்டு என்ற தரவரிசையிலிருந்து இறங்கி உள்ள இவர் , இப்பொழுது நான்காவது இடத்திற்கு  தள்ளப்பட்டுள்ளார் .

விம்பிள்டன் போட்டிகளுக்கு முன்னோடியாக இங்கிலாந்தில் இடம்பெறும் ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் தொடரில் இன்று இவர் விளையாட இருக்கிறார் . இதுவும் புல் தரையைக் கொண்ட ஒரு களமாகும்.

சரளமாக விளையாடும் ஒரு நிலையை எட்ட , தான் பகீரத பிரயத்தனம் செய்து வருவதாக  இந்த 30வயது வீரர் பிரஸ்தாபித்துள்ளார் .

கடந்த எட்டு மாத காலத்தில் எந்த ஒரு கிரான்ட் ஸ்லாம்  சுற்றுப்  போட்டியிலும் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இதுவே எனக்கு முதற்தடவை என்று இந்த வீரர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய மோதலில் இவர்  கனடிய வீரர் போஸ்பிசில் என்பவரைச் சந்திக்கிறார்

இந்த வருடம்  ஜனவரி  மாதம்  கட்டார்   ஓபன் மோதலை மாத்திரமே இவர் வென்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு