செய்தி விவரங்கள்

மின்கலம் இல்லாமல் செயல்படும் வயர்லெஸ் சுட்டி அறிமுகம்!

மின்கலம் இல்லாமல் செயல்படும் வயர்லெஸ்(wireless) சுட்டியை, ரேஷர் நிறுவனமானது(Rasher company) முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது.

மின்கலம் இல்லாமல் செயல்படும் வயர்லெஸ் சுட்டி அறிமுகம்!

கேம் தயாரிப்பில் சாதனை படைத்துவந்த ரேஷர் நிறுவனம் தற்போது தொழில்நுட்பக் கருவிகளை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது. அதன்படி சமீபத்தில் ரேஷர் என்ற புதிய மொபைல் ஒன்றினை அதிக கிராபிக்ஸ் வசதியுடன் வெளியிட்டதன் தொடர்ச்சியாக வயர்லெஸ் சுட்டி (mouse) ஒன்றினை தற்பொழுது புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

வயர்லெஸ் கருவிகள் என்றாலே மின்கல வசதி கொண்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தப் புதிய ரேஷர் மவுஸ் மின்கலம் இல்லாமல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுட்டியுடன் வழங்கப்பட்டுள்ள சுட்டி அட்டையில்(mouse pad) காந்த சக்தி செயல்படுத்தப்பட்டு, சுட்டி செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு