செய்தி விவரங்கள்

தண்டப்பணமாக 2.42 பில்லியன் யூரோ செலுத்த வேண்டிய நிலையில் கூகிள் நிறுவனம்

தனது தேடுதல் பொறியில் , ஷாப்பிங் ஒப்பீடு சேவையை முதன்மைப்படுத்திய  குற்றம் காரணமாக , கூகிள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளார்கள். ஐரோப்பிய ஆணையகம் 2.42 பில்லியன் யூரோ  (2.07பி டொலர்) இந்த அபராதத்தை விதித்துள்ளது .

சந்தை நிலவரத்தை தவறான வழிக்கு திசை திருப்பியதாக குற்றம் சாட்டி   இவ்வளவு பெரிய தொகை தண்டமாகச் செலுத்துவது , இந்த நிறுவனத்திற்கு இதுவே முதற் தடவையாகும் .

இப்படி போட்டிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குவதை , அடுத்த 90நாட்களுக்குள் நிறுத்தாவிட்டால் , மேலதிக தண்டப் பணம் செலுத்த வேண்டி  வரலாமென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது .

கூகிள் நிறுவனம் இத் தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .

2010 இலிருந்து ஐரோப்பிய ஆணையகம் கூகிள் ஷாப்பிங் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வருவது இங்கே குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு