செய்தி விவரங்கள்

இரண்டு பில்லியன் இலக்கை எட்டும் முகநூல் சமூக வலைத்தளம்

ஒவ்வொரு மாதமும் உலக ஜனத்தொகையின் காற்பகுதியினர் , முகநூலை பாவித்து வருகிறார்கள் என்று முகநூல்  சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது .

முகநூல் ஸ்தாபகரான மரக் சுக்கேர்பெர்க் ,இது பற்றிக் குறிப்பிடுகையில் , இன்று காலை எங்கள் முகநூல் சமூகம்,  இரண்டு பில்லியன் இலக்கைத் தொட்டுள்ளது என்று கூறி இருக்கின்றார் .

13 வருட கால இடைவெளியில்,  இந்த மைல்கல்லை இந்த சமூக வலைத்தளத்தால் எட்ட முடிந்துள்ளது .

ஒக்டோபர் 2012இல் ஒரு பில்லியன் பாவனையாளர்களைக் கொண்டிருப்பதாக இந்த வலைத்தளம் முன்பு அறிவித்திருந்தது .

எனவே 5வருட இடைவெளியில் இது இரட்டை மடங்காகி இருப்பது இங்கே கவனிக்கத்தக்கது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு