செய்தி விவரங்கள்

இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்துக்கான தேர்தல் அறிவிப்பு

இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்துக்கான தேர்தல் அறிவிப்பு

இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்துக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்கத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி தேசிய ஒலிம்பிக் சங்க தேர்தல்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கடந்த 22 வருடங்களாக தலைவர் பதவியில் உள்ள ஹேமசிறி பெர்னாண்டோ இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நடைபெறவுள்ள தேர்தலில் முன்னாள் டென்னிஸ் வீரரும், முன்னாள் டென்னிஸ் சங்க தலைவருமான சுரேஷ் சுப்ரமணியம் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தற்போதைய தேசிய ஒலிம்பிக் சங்க செயலாளரான மெக்ஸ்வெல் டி சில்வாவும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இவ் ஒலிம்பிக் சங்கமானது சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் கீழ் செயற்படுவதோடு, சர்வதேச ஒலிம்பிக் சங்க விதிகளின்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு