செய்தி விவரங்கள்

ரபேல் நடாலின் அதிர்ச்சி தோல்வியால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றில் ரபேல் நடால் இஸ்ரேலின் டெனிஸ் ஷாபலோவிடம் போராடி தோல்வியடைந்தார்.

கனடாவின் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றை பிரிவு 3- வது சுற்றில் 15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற ஸ்பேயினின் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் தரவரிசையில் 143-வது இடத்தில் உள்ள இஸ்ரேலின் டெனிஸ் ஷாபலோவை எதிர்த்து விளையாடினார். சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 4-6, 6-7 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரும் 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுக்குச் சொந்தக்காரருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 33-ம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் பெர்ரரை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 57 நிமிடங்கள் நடைபெற்றது. கால் இறுதியில் ரோஜர் பெடரர், 16-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்டோ பவுதிஸ்டா அகுட்டுடன் நாளை விளையாட உள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு