செய்தி விவரங்கள்

கொல்ஃப் விளையாட்டில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வரும் பராக் ஒபாமா

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடந்த ஒரு தசாப்தகாலமாக மறைத்து வைத்திருந்த தனது கொல்ப் திறமைகளை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

ஸ்கொட்லாந்துக்கு ஒபாமா மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது ஸ்கொட்லாந்திலுள்ள உலகப் புகழ்பெற்ற கொல்ப் விளையாட்டு மைதானமான புனித அன்றூஸ் வரலாற்று சிறப்பு மிக்க பழமைவாய்ந்த கொல்ப் மைதானத்தில் கொல்ப் விளையாடினார்.

போட்டிக்கு செல்வதற்கு முன்னர் அங்கு கூடியிருந்த பார்வையாளர்களுடன் சிநேகபூர்வமாக கைலாகு கொடுத்து நகைச்சுவையாக உரையாடிய பராக் ஒபாமா பின்னர் விளையாட்டிலுள்ள தனது திறமையை வெளிப்படுத்தினார்.

ஜேர்மனியின் ஜனநாயகம் என்ற தலைப்பில் எடின்பரோவில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்தரையாடலில் கலந்துகொண்ட நிலையிலேயே பராக் ஒபாமா கொல்ப் மைதானத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு