செய்தி விவரங்கள்

கந்தரோடையில் நடைபெற்ற சித்திரை புதுவருட கொண்டாட்டம்!

கந்தரோடையில் நடைபெற்ற சித்திரை புதுவருட கொண்டாட்டம்!

 

கந்தரோடை மக்கள் முன்னேற்ற இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது.

கந்தரோடை மக்கள் முன்னேற்ற இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில், சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு போட்டி நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வானது மாலை 3 மணியளவில் கந்தரோடை குளத்தடி வீதியில் உள்ள வயற்கரையில் நடைபெற்றுள்ளது.

கந்தரோடையில் நடைபெற்ற சித்திரை புதுவருட கொண்டாட்டம்!

மேலும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி N.செல்வக்குமார் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கந்தரோடை கிராம உத்தியோகத்தர் V.வடிவழகையன், வலிதெற்கு பிரதேச சபை தவிசாளர் K.தர்சன், வலிதெற்கு பிரதேச சபையின் உறுப்பினர் R.ஜோகாதேவி மற்றும் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் R.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கந்தரோடையில் நடைபெற்ற சித்திரை புதுவருட கொண்டாட்டம்!

மேலும் தொடர்ந்து இரவு 8 மணிவரை நடைபெற்ற நிகழ்வில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களான முட்டி உடைத்தல், கபடி போட்டி, கயிறிழுத்தல் போட்டி, தலையணை சண்டை, கிடுகு பின்னுதல் மற்றும் பல சிறுவர்களுக்கான நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது. மேலும் சிறுவர்களின் நடன நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டு போட்டி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தரோடையில் நடைபெற்ற சித்திரை புதுவருட கொண்டாட்டம்!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு