செய்தி விவரங்கள்

டெஸ்ட் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார் விராட் கோலி!

டெஸ்ட்   தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார் விராட் கோலி!

இலங்கைக்கு எதிரான தொடரில் 610 ரன்கள் விளாசிய விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு இரட்டை சதங்களுடன்  610 ரன்களை குவித்தார்.

இதன்காரணமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் தரவரிசைப்பட்டியலில் விராட் கோலி, இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

893 புள்ளிகளுடன் விராட் கோலி 2-ஆம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ஆவுஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் 938 புள்ளிகளுடனும், மூன்றாம் இடத்தில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 879 புள்ளிகளுடனும் உள்ளனர்.

அணிகளை பொறுத்தவரை இந்திய அணியே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

டெஸ்ட்   தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார் விராட் கோலி!

டெஸ்ட்   தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார் விராட் கோலி!

[IMAGE NOT AVAILABLE]

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு