செய்தி விவரங்கள்

விடைபெறும் நேரத்தில் சாதனையை தவறவிட்ட உசேன் போல்ட் -சோகத்தில் ரசிகர்கள்

உலக சாம்பியன் ஷிப் போட்டியில் உலக சாதனைவீரர் உசேன் போல்ட் கலந்து கொண்ட கடைசி போட்டியில் அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டு ஓட முடியாமல் டிராக்கிலேயே விழுந்தார்.

இதன் மூலம் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்ட பந்தயங்களில் உலக சாதனை படைத்த உசேன் போல்ட் 14 உலக சாம்பியன் பதக்கங்களையும், 8 ஒலிம்பிக்க பதக்கத்துடன் தனது சர்வதேச தடகள விளையாட்டு போட்டிகளில் இருந்து விடை பெறுகிறார்.

இதனால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சோகத்தில் முழ்கியுள்ளனர்.

லண்டனில் இடம்பெற்றுவரும் உலக சாம்பியன்ஷிப் 2017 தடகள போட்டியில்  ஜமைக்கா நாட்டை சேர்ந்த உலக புகழ் தடகள வீரர் உசேன் போல்ட் 4 தர 100 மீட்டர் ஓட்ட போட்டி கலந்துகொண்டார்.

இது இவர் கலந்து கொள்ளும் கடைசி தடகள போட்டி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது.

உசேன் போல்ட்டின் கடைசி போட்டி என்பால் அரங்கு முழுவதும் அவரது ரசிகர்கள் கூடியிருந்தனர்.

இந்நிலையில் போட்டியின் போது 4வது ஆக ஓடிய உசேன் போல்ட் தனது பாணியில் கடைசி நேரத்தில் வேகமெடுத்து தனக்கு முன் ஓடுபவர் முந்தும் முயற்சியின் போது எதிர்பாராத விதமாக அவரது இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் வலி தாங்காமல் ஓட முடியாமல் டிராக்கிலேயே விழுந்தார். இதை கண்டது அரங்கமே அதிர்ச்சியில் உரைந்தது.

இதையடுத்து உசேன் போல்ட்டிற்கு முதலுதவி செய்யும் குழு அவருக்கு தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறினார்.

அவருக்கு வீல் சேர் கொண்டு வரப்பட்டது. எனினும் அவர் கால் வலியுடன் நடந்தே சென்றார்.இப்போட்டியில் பிரிட்டன் குழு முதல் பரிசை பெற்றது.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் உசேன் போல்ட் காயமடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் தமிழ் செய்திகளுக்கு ...

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு