செய்தி விவரங்கள்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய புகாரில் டைகர் உட்ஸ் கைது

அமெரிக்காவின் கோல்ப் வீரர் டைகர் உட்ஸ், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, கோல்ப் விளையாடாமல், ஓய்வில் இருந்த டைகர் உட்ஸ் சீக்கிரமே கோல்ப் போட்டிகளில் விளையாட ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அவர் மது அல்லது போதைப் பொருள் உட்கொண்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதுடைய டைகர் உட்ஸ்  2013-ம் ஆண்டுக்குப் பிறகு உட்ஸ், எந்தவொரு டொர்னமன்ட்டிலும் வெற்றி பெறவில்லை. 2008-க்குப் பிறகு அவர் எந்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு