செய்தி விவரங்கள்

குரங்காக மாறிய அமைச்சர் - மாட்டிக்கொண்ட மலிங்கா

ஸ்ரீலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சரை குரங்கு என விமர்சித்த ஸ்ரீலங்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு சில போட்டிகளில் விளையாட தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீலங்கா அணி லீக் சுற்றோடு வெளியேறியது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரீலங்கா அணி  சரியாக விளையாடவில்லை.

இதனால் இலங்கை அணி வீரர்களின் உடல் தகுதி குறித்து விசாரணை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா விளையாட்டுத்துறை  அமைச்சர்  தயாசீறி ஜெயசேகரா தெரிவித்தார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, நாற்காலியை அலங்கரிக்கப்பவர்களின் விமர்சனத்தை நான் பொருட்படுத்தவில்லை.

இது கிளியின் கூடுபற்றி குரங்கு பேசுவது போல் இருக்கிறது. கிளி கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும் என்று கூறி இருந்தார்.
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து மலிங்காவிடம் விசாரணை நடத்த அமைச்சர்  தயாசீறி ஜெயசேகரா உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு