செய்தி விவரங்கள்

அமெரிக்கா கார்ப்பந்தயத்தில் வெற்றி பெற்றார் ஜப்பான் வீரர்

அமெரிக்காவின் இந்தியானா பொலிஸ் மாநிலத்தில் நடைபெற்ற இந்தியானா பொலிஸ் 500 கார் பந்தையப் போட்டியில் ஜப்பானிய வீரர் தக்குமோ சடோ வெற்றிபெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இன்டி எட்வெஞ்சர் அணியின் சார்பில் முதன்முறையாக கலந்துகொண்ட முன்னாள் உலக சம்பியனான பெர்னாடோ அலோன்சோவிற்கு, காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக போட்டியிலிருந்து விலகிக்கொள்ள நேரிட்டது. 

அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் இந்தியானா பொலிஸ் 500 மோட்டார் கார் பந்தையப் போட்டி நேற்று முன் தினம் மிக விறு விறுப்பாக இடம்பெற்றது.

இதேவேளை 53 ஆவது சுற்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஹோவாட்டின் கார் டிக்சனின் காருடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது ஹோவாட்டின் கார் தூக்கி எறியப்பட்ட போதிலும் தெய்வாதீனமாக எந்தவித காயமும் இன்றி அவர் தப்பித்துக்கொண்டார்.

இந்த நிலையில் ஜப்பானிய வீரர் தக்குமோ சடோ முதல் இடத்தைப் பெற்று வெற்றிபெற்றார். எதிர்பாரத இந்த வெற்றி குறித்து ஜப்பானிய வீரர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

இந்தியானா பொலிஸ் மோட்டார் கார் பந்தையப் போட்டியில் வெற்றிபெற்ற முதலாவது ஜப்பானிய வீரர் என்ற பெருமையையும் சடோ தனதாக்கிக்கொண்டார்.

இதேவேளை இந்தப் போட்டியில் வெற்றியை கைப்பற்றுவார் என எதரிர்பார்க்கப்பட்ட முன்னாள் சம்பியனான பெர்னாடோ அலென்சோ போட்டித் தூரம் முடிவடையவதற்கு 21 சுற்றுக்கள் எஞ்சியிருந்த நிலையில் அவரது கார் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.

எனினும் பெர்னாண்டோ அலொன்சோவைக் காண அங்கு கூடியிருந்த மூன்று இலட்சம் ரசிகர்கள் அவருக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு