செய்தி விவரங்கள்

இந்திய அணிக்கு இலங்கை துடுப்பாட்டக்காரர் பயிற்சியாளராக நியமனம் ?

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் மஹேல  ஜெயவர்தன , இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்கலாம்  என்று செய்திகள் கசிந்துள்ளன.

இப் பதவிக்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்றும் , ஜெயவர்த்தனா  இப் பதவிக்கு  விண்ணப்பித்து உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. இங்கிலாந்தில் ஆலோசகராகப் பணியாற்றிய இவர் , ஐபிஎல் தொடரில் வெற்றிபெற்ற  மும்பை இந்தியன் அணிக்கு பயிற்சியாளராக இருந்து,  பத்தாவது தடவையாக அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றெடுக்க,    இவர் கைகொடுத்துள்ளார்.

தேர்ந்த துடுப்பாட்ட வீரரான இவர் , 652 சர்வதேச ஆட்டங்களில் பங்கெடுத்து,   22,597 ஓட்டங்களை ஆடி எடுத்துள்ளார் . 54  சதங்களை அடித்த இவர் வயது    40.

எதிர்வரும் ஜூலை மாதம் வரவுள்ள   இலங்கை  விஜயத்திற்கு  முன்பாக , புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கும் நிர்ப்பந்தத்தில் , இந்தியா  இருப்பது இங்கே குறிப்பிடத் தக்கது

 

 

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு