செய்தி விவரங்கள்

கை நழுவிய தங்கப் பதக்கம்

தான் பங்கேற்கும் இறுதி ஓட்டப் பந்தய நிகழ்வில் நொண்டிக்கொண்டு உசேன் போல்ட் , பங்கேற்காமல் விலகிச் சென்ற காட்சி பலரையும் உலுப்பி எடுத்துள்ளது .இலண்டனில் தற்பொழுது இடம்பெற்று வரும் பன்னாட்டு வீரர்கள் பங்கேற்கும் தடகளப் போட்டி நிகழ்வுகளிலேயே இந்த அசாதாரண  நிகழ்வு சம்பவித்துள்ளது .

 நேற்று  நிகழ்ந்த அஞ்சல் ஓட்டப் போட்டியிலேயே இந்த எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது . முதலிடம் பிரிட்டனுக்கும் , இரண்டாம் இடம் அமெரிக்காவுக்கும் , வெண்கலப் பதக்கம் ஜப்பானுக்கும் கிடைத்துள்ளது . இதில் ஜமேக்கா சார்பாக ஓடிய போல்ட் . பாதி வழியில் , நொண்டிக்கொண்டு நின்றுவிட்டார் .பொதுவாக இவரைத்தான் மற்றையவர்கள் துரத்துவார்கள் . ஆனால் நேற்று இதற்கு நேர்மாறான சம்பவம் நடந்திருக்கின்றது .

உடனடியாக சக்கர நாற்காலி கொண்டுவரப்பட்டாலும் , பிறர் உதவியுடன்  போல்ட்     எழுந்து, நொண்டிக்கொண்டே நடந்து சென்றது நம்ப முடியாத ஒரு நிகழ்வாக இருந்தது .

இன்னொரு நிகழ்வில்,  நீண்ட தூர ஓட்ட நட்சத்திர வீரரான  மோ பாரா , கடந்த ஆறு வருடங்களில் 5000      மீட்டர்   நீண்ட தூர ஓட்டப் போட்டியில்   முதல்  தடவையாக, தங்கப் பதக்கத்தை இழந்து , வெள்ளியோடு சென்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு