செய்தி விவரங்கள்

குழந்தை கிடைக்காது என்று ஒதுக்கப்பட்டவர் அம்மாவாகிய அதிசயம்

சாப்பிடுவதில் ஒழுங்கான செரிமானம் இல்லாத பெண் ஒருவருக்கு தாய்மை அடையும் வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்கள் . சாரா  என்ற 33 வயதான இந்தப் பெண்,  வருடக்கணக்காக அனோரெக்ஸியா  என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோய் காரணமாக இவரது மாதப்போக்கு தடைப்பட்டதுடன் , அடிவயிற்றில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளியிருந்தது .

இந்தப் பெண் இங்கிலாந்தின் டேபிஷயர் (Derbyshire) பிராந்தியத்த்தைச்  சேர்ந்தவர் ஆவார் .

இவர் உடல் எக்ஸ்ரே மூலம் பரிசோதிக்கப்பட்டபோது, இவர் ஆறரை மாதக் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது .

இப்பொழுது ஒன்பது மாத வயதை எட்டிப் பிடித்துள்ள  என் மகள் என் உயிரைக் காப்பாற்றி விட்டாள்  என்று அகமகிழ்வோடு கூறுகிறாள் இந்த இளம் தாய் .

தனக்கு 14வயது தொட்டே இந்த அஜீரணப்  பிரச்சினை இருந்து வந்தது  என்கிறார் இவர்.

ஆறுமாதக் கர்ப்பிணி என்று கூறியபோது எனக்கு வாழ இன்னும் ஆறு மாதங்கள்தான் எஞ்சி இருக்கின்றன என்று நான் நினைத்தேன் என்று வேடிக்கையாகக் கூறுகிறார் இந்தத் தாய் .

மனிதர்களை மீறிய சக்தி ஒன்றுள்ளது என்பது  புலனாகின்றது  .

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு