செய்தி விவரங்கள்

பூமியைப் போன்ற புதிய கிரகத்தில் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கக் கூடும் !

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக் கழகமான நாசாவானது, பூமியைப் போன்ற பத்து புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளதோடு, இந்த பத்து கிரகங்களும் அப்படியே பூமியை ஒத்து உள்ளதாகவும், இங்கு உயிரினங்கள் வசிக்கத் தேவையான அனைத்து கூறுகளும் உள்ளது என்றும் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளது.

பூமியைப்  போன்ற  புதிய  கிரகத்தில்  வேற்றுக்கிரகவாசிகள்  இருக்கக் கூடும் !

இந்நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூமியைப் போன்ற புதிய கிரகத்தில் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கக் கூடும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

K2-18b என்ற பூமியைப் போன்ற மற்றொரு கிரகம், சூரிய மண்டலத்தில் உள்ளதாக கனடாவில் உள்ள ரொறன்ரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது பூமியில் இருந்து 111 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

அது மட்டுமின்றி K2-18b கிரகத்திற்கு அண்டை கோலாக K2-18c என்ற கிரகமும் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

K2-18b கிரகம் பாறைகளால் ஆனதாக இருப்பதால் இதன் மேற்பரப்பில் உயிர் வாழ்வதற்கு தேவையான தண்ணீர் இருக்கக் கூடும் என்றும், வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கிரகம் மிகவும் துல்லியமான, கெப்ளர் என்ற தொலைநோக்கியின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பூமியின் சூழலை ஒத்து, பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்கள் கிட்டத்தட்ட பூமியைப் போலவே இருப்பதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு